Pages

Wednesday, March 19, 2008

சிலேடை
ஆர்குட்டில் சிலேடைப்பற்றிய ஒரு நல்ல இழையிலிருந்து சில துளிகள்.
தமிழில் பல சிறப்பான வெண்பா வகைகள் உள்ளன. இவற்றுள் இரட்டுற மொழிதல் மிகவும் அழகான சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கும் ஒரு வகை .இரு பொருள்பட செய்யுள் இயற்றுவதே சிலேடை ஆகும் .

செங்கல்பட்டு பெருங்காயம்
பொருள் ஒன்று : செங்கல் பட்டு பெரும் காயம் .(அதாவது அடி படுவதை பற்றி பேசுகிறோம்).
பொருள் இரண்டு : செங்கல்பட்டில் இருந்து வரும் பெருங்காயம்.(சமையல் பொருள்).
அடுத்து ...தலை விதி வசம் மற்றும் அதன் வேற்றுமையான தலைவி திவசம் .
கவி காளமேகம் இதற்க்கு மிகவும் பெயர் பெற்றவர். அவரது பாடல்களை தெரிவிப்பதற்கு முன்பு அழகிய சொக்கநாதர் பாடல் ஒன்றைப் பார்போம் .

சக்கரத்தி னாலரவந் தாங்குதலி னோடுமுள்ளெட்
அக்கரத்தி னால்வேலை யார்வதினால் - மிக்கவன்பர்
முக்கியமாய்க் கைக்கொளலால் முத்துசா மித்துரையே
கைக்கடியா ரந்திருமால் காண்.

பொருள் :
இது திருமாலுக்கும் கைக்கடிகாரத்துக்குமான சிலேடை .
கடிகாரம்:
1. சக்கர வடிவை உடையது .
2. ஒருவித ஓசையைக் கொண்டுள்ளது .
3. முள் தொடுகின்ற எண்ணையும் எழுத்துக்களையும் உடையது .
4. சிறந்த வேலைப்பாடு உடையது .
5. விரும்பும் அன்பர் கைக்கு அழகூட்டுவது .

திருமால் :
1. சக்கராயுதத்தை உடையவர் .
2. ஆதிசேடனாகிய பாம்பணைமேல் பள்ளிகொள்பவர்.
3. ஓம் நமோ நாராயணாய என்ற அட்டாக்கர மந்திரத்தால் வணங்கப்படுபவர் .
4. திருப்பாற்கடலில் எழுந்தருளி உள்ளவர் .
5. மெய் அன்பர்களால் கைகூப்பித் தொழும் தன்மையர் .

ஆலமர்க் கடவுள்
பொருள் 1: கல்லால மரத்துக்கு அடியில் இருந்து தனது மௌனத்தாலேயே அனைத்தையும் கற்பிக்கும் தென்முகக் கடவுள் .(தக்ஷிணாமூர்த்தி )
பொருள் 2 : ஊழிக் காலத்தே உலகினைத் தன்னுள் அடக்கி ஆலிலைத் தளிரிலே படுத்திருக்கும் குழந்தைக் கண்ணன் .

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!

பூசணிக்காய்:-
அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக!

சிவபெருமான்:
அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டுவளைத்
தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.